கொட்டும் மழையில் ரீல்ஸ்.. மின்னலிடம் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆன சிறுமி.. வைரல் வீடியோ!
பீகாரில் கொட்டும் மழையில் நனைந்தவாறு நடனமாடி ரீல்ஸ் எடுத்தபோது மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் மூழ்கி இருக்கின்றனர். லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ தயாரித்து கொண்டிருந்தார். மொட்டை மாடியில் நின்று அவர் மழையில் நனைந்தவாறு நடனமாடி வீடியோ எடுத்த போது அவரது அருகில் மின்னல் தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார்.
Reels nahi rukni chahiye.💃🙂
— NITESH (@Nitesh805181) June 26, 2024
📍Sitamarhi, Bihar#LighteningStrike #Thunder ⚡🌩️ pic.twitter.com/9b1i9YDzNo
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.