விவாதத்திற்கு தயாரா? பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்!!

 
மத்திய அரசுக்கு தெளிவான புரிதல் இல்லை! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

டெலிப்ராம்டர் கூட வைத்துக் கொள்ளுங்கள், நேரலையில் என்னுடன் விவாதத்திற்கு தயாரா என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

பிரதமரின் இந்த பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "நான் உங்களுக்கு  சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

From around the web