அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு.. வருகிற 22-ம் தேதி புதுச்சேரியில் பொது விடுமுறை!

 
Puducherry

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு வரும் 22-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

School

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ம் தேதி நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தர பிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குடமுழுக்குக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின.

Govt office

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 22-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒன்றிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு, அன்றைய தினம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web