ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. வைரல் வீடியோ!

 
Air India Air India

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு விமான சேவை இயங்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானத்தில் மழைத் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Air India

ஏர் இந்தியா போயிங் பி787 ட்ரீம்லைனர் விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து கேபினுள் இந்த மழைத்தண்ணீர் கசிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண்கள் மழைத் தண்ணீர் கசியும் பகுதிகளை துணியைக் கொண்டு அடைக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.


ஏற்கனவே பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில் உள்ள நம்பகத்தன்மை மற்றும் தேதி ஆகியவை தனிப்பட்ட முறையில் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web