வாக்கு செலுத்தினார் ராகுல் காந்தி! டெல்லி நிலவரம் என்ன?

 
Rahul

டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி என்று கூறப்படும் நிலையில் இரு கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியைக் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் அதையே விரும்புகிறது.

இந்நிலையில் காலையிலேயே சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. டெல்லியை பாஜக கைப்பற்றுமா? தனித்து ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

From around the web