தள்ளு.. தள்ளு.. தள்ளு.. பஸ்சை போல ரயிலை தள்ளிய பயணிகள்.. வைரல் வீடியோ!!

 
Train

நடுவழியில் பழுதாகி நின்ற ரயிலை ராணுவ வீரர்களும், மக்களும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் இறங்கி தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் இடையே தினமும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தெலங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே ரயில் வந்து கொண்டு இருந்த போது திடீரென்று ரயிலில் தீ பிடித்தது.

அந்த ரயிலின் எஸ்2 முதல் எஸ்6 வரயிலான பெட்டிகளில் தீ பிடித்தது. கொளுந்து விட்டு எரிந்த தீயை பாத்ததும் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் எமெஜென்சி டோர் வழியாகவும் குதித்து தப்பினர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Train

இதனிடையே, பழுதாகி நிற்கும் பேருந்தை போல ரயிலை போலீசாருடன் இணைந்து பலர் தள்ளி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து இருந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவது எனன்வென்றால், ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததும் ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

கொளுந்து விட்டு எரிந்த தீ பிற பெட்டிகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தள்ளியுள்ளனர். எஸ்1 மற்றும் எஸ்2 பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி ஆகியவை ரயிலின் பின்பக்கத்தில் இருந்தன. இந்த பெட்டிகளில் தீ பரவாமல் இருக்க அர்ப்பணிப்பு மிக்க ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் தள்ளி செல்லப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் ரயிலை தள்ளி சென்றதால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ரயில்வே என்ஜின் வரும் வரை காத்திருந்தால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவி விடும் என்பதால் ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் ரயில் பெட்டிகளை கைகளாலே தள்ளி சென்று பெரும் அசம்பாவிதம் நேரிடாமல் தடுத்துள்ளனர். ரயில்வே ஊழியர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாரட்டியும் வருகின்றனர்.

From around the web