பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்து
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் குர்பிரீத் கவுர் தம்பதியருக்கு மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகவந்த் மான், எல்லாம் வல்ல கடவுள் தனக்கு ஒரு மகளை பரிசாக கொடுத்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், குழந்தையின் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பகவந்த் சிங் மானின் மூன்றாவது குழந்தையாகும். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுரை பிரிந்தார். 2015இ-ல் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவதாக டாக்டர் குர்பிரீத் கவுரை ஜூலை 2022ல் மணந்தார்.
Blessed with baby Girl.. pic.twitter.com/adzmlIxEbb
— Bhagwant Mann (@BhagwantMann) March 28, 2024
பகவந்த் மான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, காமெடியன், பாடகர் மற்றும் நடிகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.