அமெரிக்காவில் பிரதமர் மோடி! பஞ்சாபில் இந்தியர்களுடன் இறங்கும் அமெரிக்க விமானம்!!

அமெரிக்காவில் பிரதமர் மோடி அரசுப்பயணமாக சென்றிருக்கும் போது, அதிபர் ட்ரம்ப் சட்டபூர்வமற்ற முறையில அமெரிக்காவில் குடியிருக்கும் 119 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது, அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறி இருக்கும் இந்தியர்களை திரும்பவும் பெற்றுக்கொள்ள தயார் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி. மேலும், ஆசை வார்த்தை காட்டி சாமானிய மக்கள் ஏமாற்றப்பட்டு அமெரிக்காவுக்குள் சட்டபூர்வமற்ற முறையில் ஏஜெண்டுகளால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம். எந்த நாட்டிற்குள்ளும் அந்த நாட்டின் அனுமதியின்றி யார் குடியேறி இருந்தாலும் அது தவறானது ஆகும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கும் அமெரிக்க விமானத்தில் 119 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 67பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குஜராத்தைச் சேர்ந்த 8 உ.பி ஐ சேர்ந்த 3 பேர், கோவா 2, ராஜஸ்தான் 2, மஹாராஷ்ட்ரா 2, இமாச்சல பிரதேசம் 1, காஷ்மீர் 1 என்று மாநிலவாரியாக தெரியவந்துள்ளது. சோதனைகளுக்குப் பிறகு அமிர்தசரஸிலிருந்து சொந்த ஊர்களுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இரண்டாவது விமானமும் பஞ்சாபிலேயே தரையிறங்குவதால், அம்மாநில அரசு அதிருப்தி அடைந்துள்ளது. மாநிலவாரியாக பஞ்சாப் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதால் விமானம் அங்கே அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.