மசூதியை நோக்கி அம்பு எய்வது போல பாவனை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்!

 
HYderabad

ராமநவமி நிகழ்ச்சியின்போது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் பாஜக வேட்பாளர் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அந்த வகையில் தெலுங்கானாவில் வரும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Hyderabad

இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் மாதவி லதா. இந்த நிலையில், ஐதரபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் பங்கேற்றார்.

அப்போது மசூதி ஒன்றின் அருகே வந்த போது, கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல பாவனை செய்த  மாதவி லதா அதனை தொலைவிலிருக்கும் இலக்கு நோக்கி எய்வது போல காட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, ஐதராபாத்தின் பாஜக வேட்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன.


இதனையடுத்து, இந்த செய்கை மற்றும் வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, மன்னிப்பும் கோரியிருக்கிறார். “அது முழுமை பெறாத வீடியோ ஒன்றின் சிறு பகுதி மட்டுமே. அந்த வகையில் தவறாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் நான் மதிக்கிறேன். எனினும் எவருடைய உணர்வுகளையேனும் எனது செய்கை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று விளக்கி உள்ளார்.

From around the web