காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது..!

 
president-office president-office

சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீர செயல்களுக்கான விருது, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான விருது, குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது ஆகியவை வழங்கப்படுவது உண்டு.

Draupadi murmu

அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 954 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழ்நாட்டை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி.பவானீஸ்வரிக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழ்நாட்டை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Medal

சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு, திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் முத்து மலை, கோவை நகர காவல் கண்காணிப்பாளர் புகழ் மாறன் உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

From around the web