மாணவர்களுக்கு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

 
Next

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளநிலை மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரவும், பயிற்சி மேற்கொள்ளவும் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வருகிற 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது.

Next

இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

NEXT

நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி பிரதமருக்கு கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் நெக்ஸ்ட் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார்.

From around the web