12ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி!!

இந்தியாவின் பிரதமராக 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி 12 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அமைச்சரவை உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமராக பதவி வகித்து வரும் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளது. பணமதிப்பிழப்பு தொடங்கி கொரோனா உயிரழப்புகள் வரை சாமானிய மக்கள் கடும் சோதனைகளை சந்தித்து உள்ளனர். விலைவாசி உச்சம் தொட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது.
வட மாநிலமக்கள் தென் மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வந்து கொண்டே இருக்கின்றனர். வந்தே பாரத் நவீன ரயில்கள் வந்தாலும், ரயில்களில் சாமானிய மக்களுக்கான பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் அதிகரித்துள்ள நிலையில் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் விலைகள் இல்லை.
உலகநாடுகள் மத்தியில் மிகப்பெரியத் தலைவராக முதலில் உருவெடுத்த பிரதமர் மோடியின் பிம்பம் சரிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை, அமெரிக்காவில் பிரதமர் மோடி இருக்கும் போதே, இந்தியர்களை சங்கிலியில் கட்டி போர் விமானத்தில் நாடு திருப்பி அனுப்பிய நிகழ்வு உலக நாடுகளையே உலுக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.
ஒரு வகையில் இந்தியா முன்னேறியுள்ளது போல் தோன்றினாலும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்த பாடில்லை என்பது தான் அடித்தட்டு மக்களின் எண்ணமாக உள்ளது.