பெண்களுக்கு பிரதமர் மோடி பரிசு.. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைப்பு..!

 
Gas

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Anurag Thakur

அப்போது அவர் கூறியதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது.

ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Gas

மேலும் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை பாராட்டி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

From around the web