மோடி தொடங்கிய வந்தே பாரத் ரயில்.. தகாத செயலில் பாஜகவினர்.. அதிர்ச்சி வீடியோ
மீரட் - லக்னோ இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலில் பயணித்த பெண்கள், தங்களிடம் பாஜகவை சேர்ந்த நபர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது, பாஜகவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நேர்ந்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் ரயிலில் உள்ளே மற்றொரு கேபினுக்கு சென்று கொண்டிருந்தபோது, எங்களை வழிமறித்த சில பாஜகவினர், அந்த கேபின் பாஜகவினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டது என்றும் அதற்குள் வர முடியாது என்றும் கூறினர்.
எனவே நாங்கள் திரும்பிச் செல்ல முயற்சித்தோம், ஆனால் எங்களை செல்லவிடாமல் மரித்த அவர்கள் ஏன் ரயிலுக்குள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி எங்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள் எங்களை பிடித்துத் தள்ளினர் என்று தெரிவித்தார். தாங்களும் பாஜகவுக்கு ஆதரவானவர்கள்தான் என்று தெரிவித்த அந்த பெண் ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த இன்ப்ளூயன்ஸார்களான எங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
This is completely unacceptable. The train is public property, not a personal or BJP asset.
— Dr. Shama Mohamed (@drshamamohd) August 31, 2024
BJP workers harassing female passengers on the Vande Bharat Express, inaugurated by PM @narendramodi Ji.
They must face appropriate action. pic.twitter.com/8XYqcMg9Ox
ஆனால் இதுபோன்ற செயல்களினால் மொத்த கட்சிக்கும் களங்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூா் -நாகா்கோவில், மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட் - லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.