மீண்டும் மணிப்பூர் மக்களை ஏமாற்றியுள்ளார் பிரதமர் மோடி! காங்கிரஸ் குற்றசாட்டு!
Updated: Feb 25, 2025, 20:04 IST

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்ற பிரதமர் மோடி அருகில் உள்ள மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லாதது ஏன் என காங்கிரஸ் அக்ட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி மீண்டும் மணிப்பூர் மக்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளார். அவர் அசாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்று அங்கு ஒரு இரவைக் கழித்தார். ஆனால் அருகிலுள்ள மணிப்பூரைப் பார்வையிடவில்லை. கடந்த இருபத்தொரு மாதங்களாக ஏரளான துயரங்கள், வலிகள், வேதனைகள் மற்றும் துன்பங்களைச் சந்தித்த மணிப்பூர் மக்களை மோடி எப்போது நேரடியாகச் சந்திப்பார்? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.