முதல் ஆளா வந்த பினராயி விஜயன்.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிணையும் தென்னிந்தியா!!

பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பதற்காக சென்னையில் நாளை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏழு மாநிலங்களுக்கு தமிழ்நாடு அமைச்சர், திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு நேரில் சென்று மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் நேரில் சந்தித்து முதலமைச்சரின் அழைப்பை கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட பினராயி விஜயன் ஒரு நாள் முன்னதாகவே இன்று சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் பினராயி விஜயனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் சென்று வரவேற்றனர். நாளை நடைபெற உள்ள கூட்டம் தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.