கர்நாடகாவில் புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை.. பலே கொள்ளையன் கைது!

 
Karnataka

கர்நாடகாவில் புறாக்களை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.எப்படி? ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து அந்த நபர் திருடிச் செல்கிறார் என்று போலீசார் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நூதன முறையில் சிக்காமல் கொள்ளையடித்து வந்த மஞ்சுநாதன் என்பவரை பிடித்து கைது செய்தனர்.

Dove

புறாக்களை பயன்படுத்தி தான் கொள்ளையடிக்கும் முறை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளான். மஞ்சுநாதன் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது, வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், இலக்கை எட்டியவுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் மீது இரண்டு புறாக்களை விடுவிப்பான்.

பறவைகள் பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து, சிறிய கவனத்தை ஈர்க்கும். ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் புறாக்களை எதிர்கொண்டால், மஞ்சுநாதன் அங்கு செல்வதில்லை. ஒரே வேளை புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.

arrest

பூட்டிய வீட்டை அடையாளம் கண்டவுடன், மஞ்சுநாத் இரும்பு கம்பியை பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான். இவ்வாறு, நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையை தொடர்ந்து, மஞ்சுநாதன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை போலீசார் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web