6-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் விறுவிறு வாக்குப்பதிவு

 
Election

நாடு முழுவதும் 6-ம் கட்டத் தேர்தலை ஒட்டி 57 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதியும், 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் கடந்த 20-ம் தேதியும் நடைபெற்றது.

Election

இந்த நிலையில், 58 தொகுதிகளுக்கு இன்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசாவில் 6 தொகுதிகளும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகிறார்கள்.


ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன். வளர்ச்சியில் எனக்கு எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு. ஏனென்றால் வளர்ச்சியை நாம் உருவாக்க வேண்டும். செல்வம் இருந்தால் மட்டுமே அது வறுமையை ஒழிக்காது. ஜார்க்கண்ட் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதுவே எனது வேண்டுகோள் என்று கூறினார்.

From around the web