நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தேதிகள் அறிவிப்பு

 
tasmac

நாடாளுமன்ற தேர்தலையோட்டி தமிழ்நாட்டில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Tamil-Nadu-Urban-Local-Election-61-percentage-Votes-Registration

இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடக்கும் தினத்திலும், அதற்கு முந்தயை தினத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Election commission

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

From around the web