மகளை கொன்று விட்டு தற்கொலை செய்த பெற்றோர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

 
Karnataka

கர்நாடகாவில் பெற்ற மகளை கொன்று தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு வினோத் (43) என்பவர் அவருடைய குடும்பத்தினருடன் சொகுசு காரில் வந்து நேற்று முன்தினம் தங்கியுள்ளார். சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்ல கூடிய வனம் மற்றும் மலை பகுதியில் அந்த விடுதி அமைந்துள்ளது. அவர்கள் சற்று ஓய்வெடுத்து விட்டு பின்னர் விடுதியை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அதன்பின் கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு இரவு உணவுக்கு விடுதிக்கு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் (டிச. 9) காலை விடுதியை காலிசெய்து விடுவோம் என வினோத், ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

dead-body

இந்த நிலையில், நீண்டநேரம் திறக்கப்படாமல் அவர்களுடைய அறை பூட்டப்பட்டு இருந்துள்ளது. ஊழியர்கள் அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, வினோத், அவருடைய மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டனர்.  இதனால் ஊழியர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விடுதியை சோதனையிட்டனர். இதில், வினோத் அவருடைய மனைவி ஜுபி ஆபிரகாம் (37) மற்றும் அவர்களின் 11 வயது மகளான ஜேன் மரியா ஜேக்கப் ஆகியோர் மரணமடைந்து கிடந்துள்ளனர். தீவிர நிதி நெருக்கடியால் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கின்றனர் என அதுபற்றிய தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.  அவர்கள் கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

Police

இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணை முடிவில், முதலில் மகளை கொலை செய்து விட்டு பின்னர் அந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறது என தெரிய வந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ள போலீசார், உறவினர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web