காருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பஞ்சாயத்து தலைவர்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் காருக்குள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதப்காட் மாவட்டம் தியா ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணேஷ் சிங் (34). இவர், கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவரது கார் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் நின்று கொண்டிருந்தது.

murder

இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அங்கு சென்றனர். காருக்குள் பஞ்சாயத்து தலைவர் கருணேஷ் சிங் கழுத்து அறுக்கப்பட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் பிணமாக கிடந்த பஞ்சாயத்து தலைவர் கருணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவரை கடத்தி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web