பகீர் வீடியா.. சரிந்து விழுந்த புதிய பாலம்.. அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மகாராஷ்டிராவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் பகதூர்ஷேக் நாகா பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தூண் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. பாலம் கட்ட ராட்சத இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் பாலத்துக்காக வைக்கப்பட்டு இருந்த 2 ராட்சத சட்டங்கள் சரிந்து விழுந்தன. ராட்சத சட்டம் சரிந்து விழுந்ததில் பாலம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
சரிந்து விழுந்த புதிய பாலம்.. அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!#Mumbai #Chiplun #bridge #collapse pic.twitter.com/GJpRgwEr8O
— A1 (@Rukmang30340218) October 17, 2023
இதில், அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த பகுதியில் தொழிலாளர்கள், பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் விபத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணி நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.