ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டம் அமலானால் அது அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் ,ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்று பட்டு எதிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் படுத்தப்பட்டால் 6 மாதங்கள் தொடர்ச்சியாக தேர்தல் நடைபெறும். பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தேர்தல் வரும். ஒரு வேளை மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்து விட்டால் மீதி காலத்திற்கு ஆளுநர் ஆட்சியே நடைபெறும் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்துவிட்டால் இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வியும் எழுகிறது.?
தமிழ்நாட்டில் அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.