ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி மரணம்... பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலவருமான நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
மறைந்த ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் மற்றும் கியான் பட்நாயக்கின் மூத்த மகள் கீதா மேத்தா. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், ‘கர்ம கோலா’, ‘ஸ்னேக் அண்ட் லேடர்ஸ்’, ‘எ ரிவர் சூத்ரா’, ‘ராஜ்’ மற்றும் ‘தி எடர்னல் கணேஷா’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுத்தாளர், ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.
ஒடிசாவின் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் தொழிலதிபர் பிரேம் பட்நாயக் இருவரும் கீதா மேத்தாவின் இரு சகோதரர்கள். என்றாலும், நவீன் பட்நாயக் உடன் கீதா மேத்தா மிக நெருக்கமானவர் என அறியப்படுகிறது. இந்த நிலையில், கீதா மேத்தா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வயோதிக பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் மறைந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியான கீதா மேத்தாவின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
I am saddened by the passing away of noted writer Smt. Gita Mehta Ji. She was a multifaceted personality, known for her intellect and passion towards writing as well as film making. She was also passionate about nature and water conservation. My thoughts are with @Naveen_Odisha…
— Narendra Modi (@narendramodi) September 16, 2023
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரபல எழுத்தாளர் ஸ்ரீமதி கீதா மேத்தா ஜி அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு பன்முக ஆளுமையாக இருந்தார், அவருடைய அறிவுத்திறன் மற்றும் எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்திற்காக அறியப்பட்டார். அவர் இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிலும் ஆர்வமாக இருந்தார். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் நவீன் பட்நாயக் மற்றும் முழு குடும்பத்துடன் உள்ளன. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.