என்.வி.எஸ் புதிய வழிகாட்டு செயற்கைக்கோள்... வரும் 29-ம் தேதி விண்ணில் செலுத்தும் இஸ்ரோ!!

 
ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் 29-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ் என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

ISRO

அந்த வகையில், ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, கூடுதலாக, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3-வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

ISRO

ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை, வருகிற 2025-ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இலக்கை எட்ட இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

From around the web