அடுத்த அதிர்ச்சி.. எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ஒடிய பயணிக்கள்.. பரபரப்பு வீடியோ!

 
Train

தெலங்கானாவில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா மற்றும் ஐதராபாத் நகரின் சிக்கந்தராபாத் இடையே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போல் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி இடையே சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த ரயிலில் S4, S5, S6 ஆகிய 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த ரயில் பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி இடையே நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Train

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீயில் கருகின. இந்த ரயிலில் சுமார் 1,500 பயணிகள் உள்ளனர். எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.


எனினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ பிடித்து எரிந்த பெட்டிகளுக்கும் மற்ற பெட்டிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு அகற்றப்பட்டது. இதன் காரணமாக மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. ரயிலில் சார்ஜ் செய்யும் இடத்தில் பயணி ஒருவர் சிகரெட்டை புகைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

From around the web