பெங்களூருவில் புதிய அமெரிக்கத் தூதரகம்! விசா பிரச்சனைகள் தீருமா?

நீண்டநாட்களாக பெங்களூருவில் அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடகா அமைச்சர்கள் டி.பி.பாட்டில், பிரயாங்க் கார்கே மற்றும் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அமெரிக்கா - இந்தியா நட்பு என்பது நீண்ட நெடிய பாரம்பரியமிக்கது. அமெரிக்காவின் இரண்டாவது தூதரகம் கொல்கத்தாவில் தான் திறக்கப்பட்டது என்று தெரிவித்தார் எரிக்.
நீண்ட நாட்கள் கோரிக்கைக்குப் பிறகு பெங்களூருவில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. விரைவில் இங்கு விசா சேவைகளையும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பெங்களூருவில் புதிய தூதரகம் அமைவது கர்நாடகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதாக உள்ளாது என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
அமெரிக்காவுக்கு பயணிகள்/ வர்த்தக விசாக்கள் கிடைப்பதற்கு ஒராண்டு காத்திருக்கும் நிலை உள்ளது. புதிய தூதரகத்தில் விசா வழங்கத் தொடங்கும் போது இந்தக் காத்திருப்பு பட்டியல் நேரம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.