புதிய மருத்துவர்கள் பணி நியமனம்! ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!!
Feb 21, 2025, 07:05 IST

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்காக 2 ஆயிரத்து 642 புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 26ம் தேதி வழங்க உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. காலியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதையடுத்து தற்போது 2 ஆயிரத்து 642 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.