சூட்கேஸில் அடைக்கப்பட்ட நீட் மாணவன்.. வாயில் டேப் ஒட்டிய நிலையில் சடலமாக மீட்பு!

 
suitcase

மேற்கு வங்கத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் அடித்துக் கொலை செய்து சூட்கேஸில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 347 கிலோமீட்டர் தொலைவில் மால்டா மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் மகிஷாபதன் பகுதியைச் சேர்ந்தவர் சாஜித் ஹொசைன் (19). இவர் வாடகை வீட்டில் தங்கி நீட் தேர்விற்கு படித்து வந்தார். இவர் கடந்த 4-ம் தேதி முதல் காணாமல் போனார். அத்துடன் அவரது செல்போனும் காணாமல் போனது. 

murder

இந்த நிலையில், சாஜித் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், 30 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து புதுநகர் காவல் நிலையத்தில் சாஜித்தின் தந்தை புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சாஜித் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது கட்டிலுக்கு அடியில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்தது. அதை எடுத்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதில், சாஜித் வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தலையணை வைத்து அழுத்தி அடித்துக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் மர்மநபர்கள் அடைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Police

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சாஜித் ஹொசைன் கொலை தொடர்பாக 2 பெண்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்திற்காக சாஜித்தை அவர்கள் கொலை செய்தார்களா வேறு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web