இன்று நீட் தேர்வு.. இந்த மாநிலத்தில் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

 
Neet

மணிப்பூரில் தொடரும் வன்முறையால் இன்று நடைபெற இருந்த நீட் இளநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

Neet

இந்த நிலையில், 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இன்று (மே 7) 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், வன்முறை மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

NEET

மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

From around the web