நிர்வாணமாக வீடியோ காலில் பேசி மயக்கிய இளம்பெண்.. 2.5 கோடியை பறிகொடுத்த வியாபாரி.. அதிர்ச்சி சம்பவம்

 
Kerala

கேரளாவில் 60 வயது முதியவரை ஏமாற்றி இளம்பெண் 2.50 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் 60 வயது தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் மூலம் அறிமுகமான இளம்பெண், தனக்கு கல்வி செலவுகளை செய்ய உதவி கேட்டுள்ளார். இந்த வியாபாரியிடம் ரூ.1,000 தந்துதருமாறு கேட்டுள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த வியாபாரி, தொடர்ந்து அந்த இளம்பெண்ணுடன் பேசியுள்ளார்.

Videos

இதை நம்பிய முதியவர் உடனடியாக 1000 ரூபாயை அனுப்பி வைத்தார். இதையடுத்து இருவரும் நெருக்கமாகிவிட்டனர். ஆனால் இருவரும் நேரில் சந்தித்ததில்லை. இந்த நிலையில்  வீடியோ காலில் இளம்பெண் நிர்வாணமாக இருந்துள்ளார். அதனை பார்த்து பதற்றமடைந்த தொழிலதிபர் அழைப்பை துண்டிக்காமல் தொடர்ந்து ஜாலியாக இளம்பெண்ணுடன் பேசியுள்ளார்.

அதனை ரெகார்ட் செய்த இளம்பெண்  “உங்கள் வீடியோவை பகிராமல் இருக்க பணம் தர வேண்டும்” என்று மிரட்டியதால், தொழிலதிபர் பயத்தில் தனது  மனைவி, மாமியார் நகைகளை அடகு வைத்து ரூ.2.50 கோடி வரை இளம்பெண் மற்றும் அவரது கணவருக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Police

விபரங்களை அறிந்த தொழிலதிபரின் மகன், தந்தையை சமாதானப்படுத்தி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷெமி மற்றும் அவரது கணவர் சோஜன் போஸ் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, பறிக்கப்பட்ட பணத்தில் நகைகள், விலையுயர்ந்த கார்களை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தம்பதியினர் திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

From around the web