கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றனும்! பாராளுமன்றத்தில் திருச்சி சிவா போர்க்கொடி!!

 
Trichy Siva

எமர்ஜென்சி காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலங்களுக்கே மாற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தவும் மாநில உரிமைகளைக் காக்கவும் இது அவசியம். பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான கல்வியை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்க முடியும. மலைவாழ் மக்களுக்காக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் ஏகலைவா திட்டத்தில் உள்ளூர் மக்களின் தேவைகளையும் மொழியையும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தெரியவில்லை.

கேரளா, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையையும் பீகார் போன்ற வட மாநிலங்களில் உள்ள கல்வி நிலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே மாநில அளவில் கல்வித் திட்டங்கள் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பது தெரியும்.

உள்ளூர் மக்களின் தேவையை நிறைவேற்றவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், கூட்டாட்சி தத்துவத்த்தை நடைமுறைப்படுத்தவும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வதாக திருச்சி சிவா பேசினார்.

From around the web