சிறுமியை ஆற்றுக்குள் தள்ளிவிட்ட தாயின் ஆண் நண்பர்.. சாமர்த்தியமாக செயல்பட்டு உயிர் தப்பிய சம்பவம்!!

 
Andhra

ஆந்திராவில் தாயின் ஆண் நண்பர் செல்ஃபி எடுப்பதாக கூறி, சுகாசினி, கீர்த்தனா, ஜெர்ஸி ஆகிய மூவரையும் பாலத்தில் இருந்து தள்ளியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம தாடிபள் கிராமத்தை சேர்ந்தவர் புப்பாலா சுகாசினி (36). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து 13 வயது மகள் கீர்த்தனாவுடன் வசித்து வந்தார். சுகாசினிக்கும் பிரகாசம் மாவட்டம் தர்சியை சேர்ந்த உலவா சுரேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவிங் டூகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர்.

guntur

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஜெர்ஸி என்ற குழந்தை இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுரேஷ் - சுகாசினிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுகாசினி மற்றும் அவரது 2 பிள்ளைகளை தீர்த்துக் கட்டுவதற்கு சுரேஷ் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மாலையில் மூவரையும் ராஜமகேந்திரவரம் என்ற இடத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த வாகனம் ஞாயிறன்று காலை 4 மணிக்கு ரவுலபலத்தில் உள்ள கவுதமி பாலத்திற்கு வந்துள்ளது. அப்போது, செல்ஃபி எடுப்பதாக கூறி, சுகாசினி, கீர்த்தனா, ஜெர்ஸி ஆகிய மூவரையும் பாலத்தில் இருந்து தள்ளியுள்ளார் சுரேஷ். இதில் சுகாசினியும், ஜெர்ஸியும் ஆற்றுக்குள் விழுந்தனர். சிறுமி கீர்த்தனா விழும்போது அவரது கையில் பைப் ஒன்று மாட்டியுள்ளது. இதைப் பிடித்துக் கொண்டு அவர் தொங்கினார்.


அப்போது சாமர்த்தியமாக செயல்பட்ட கீர்த்தனா கையில் இருந்த மொபைலில் இருந்து 100-க்கு டயல் செய்து போலீசாரை வரவழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர். மேலும் தள்ளி விட்ட சுரேஷை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். ஆற்றுக்கு விழுந்த சுகாசினி மற்றும் ஜெர்ஸியை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

From around the web