2 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய்.. போன் பேசியபோது அழுததால் விபரீதம்!

 
Jharkhand

ஜார்க்கண்டில் போன் பேசியபோது குழந்தை அழுததால், எரிச்சலடைந்த தாய் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டத்தை சேர்ந்தவர் அஃப்சானா கட்டூன். இவருக்கும் நிஜாமுதீன் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அஃப்சானாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

baby

அதன் பின்னர் அஃப்சானா தனது இளைய மகனுடன் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். அப்போது அவர் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அவரது 2 வயது மகன் அழத் தொடங்கினான். அந்த குழந்தையை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக, அஃப்சானா குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து தனது கணவரை அறைக்குள் அழைத்தபோது, குழந்தை மயங்கி கிடந்தது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அஃப்சானாவின் மாமனார் ரோஜான் அன்சாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Jarkhand

இதையடுத்து போலீஸார் அஃப்சானாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறுகையில், “எனது மகனை நான் கொல்லவில்லை. கோபத்தில் தள்ளிவிட்டதில் படுக்கையிலிருந்து கீழே விழுந்ததில் மயக்கமடைந்து இறந்துவிட்டான்” என்றார். இதையடுத்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அஃப்சானாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web