அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும்.. அடம்பிடித்த மனைவி.. அடித்தே கொன்ற கணவன்.. தலைநகரில் பயங்கரம்!!

டெல்லியில் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய மனைவியை கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நஜப்ஹர் பகுதியில் வசித்து வருபவர் விக்கி. இவரது மனைவி நேஹா (40). இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். நேஹாவின் சொந்த ஊர் பீகாராகும். இதனிடையே, விக்கிக்கும் அவரது மனைவி நேஹாவுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வந்தது.
இந்த நிலையில், விக்கிக்கும் அவரது மனைவி நேஹாவுக்கும் இன்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் பீகாரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
மனைவி தனது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியதால் ஆத்திரமடைந்த விக்கி தனது மனைவி நேஹாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இடையேயான மோதலில் விக்கியும் படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.