லிப்ட் கேட்ட மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 பேர் கைது.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Rape

உத்தர பிரதேசத்தில் லிப்ட் கேட்ட மைனர் சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுமி, காசியாபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார். அப்போது வரும் வழியில் அந்த சிறுமி ஒரு காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.

rape Abuse

இதையடுத்து அந்த காரில் வந்த நபர்கள் சிறுமியை தங்கள் காரில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கொண்டு சென்று அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

Police

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

From around the web