பைக் ஓட்டிக்கொண்டே சுயஇன்பம்.. வாட்ஸ்அப்பிலும் விடாமல் விரட்டிய காமுகன்.. ரேபிடோ ஓட்டுநர் மீது இளம்பெண் அளித்த பகீர் புகார்!!

கர்நாடகாவில் பெண் பயணி ஒருவர் ரேபிடோவில் சென்றபோது, பைக் ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் அதிரா புருஷோத்தமன். இவர் கடந்த 21-ம் தேதி டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டம் முடிவடைந்ததும் அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் செயலியில் குறிப்பிட்ட பைக் இல்லாமல் வேறு ஒரு பைக்கில் ஒருவர் வந்துள்ளார்.
சந்தேமகம் அடைந்தாலும் தான் பதிவு செய்ததை உறுதி செய்த பிறகு ரேபிடோ டாக்சியில் அதிரா ஏறியிருக்கிறார். ஆள் நடமாற்றம் இல்லாத பகுதியில் அந்த பைக் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டே அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய தொடங்கி இருக்கிறார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிரா, பயந்து போய் எதுவும் சொல்லாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட இடம் வருவதற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அதிரா இறங்கியுள்ளார். பின்னர் அந்த ரேபிடோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றுள்ளார்.
ஆனால், அதன் பிறகும் அதிராவுக்கு இரவு முழுவதும் ஆபாச மெசேஜ்களை அந்த ஓட்டுநர் அனுப்பியுள்ளார். ஹார்ட், முத்தம் உள்ளிட்ட சிம்பள்களை அனுப்பியதுடன் ஐலவ் யூ மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அதிரா இது குறித்து ரேபிடோ நிறுவனத்திற்கு காட்டமாக கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ரேபிடோ ஓட்டுநர் தனக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகளை கவனித்த பெங்களூரு மாநகர போலீசார், அடுத்து அதிராவை தொடர்பு கொண்ட விபரங்களை கேட்டறிந்தனர். அவர் கொடுத்த தகவல்களின் பேரில் எலக்டரானிக் சிட்டி போலீசார் அந்த ஓட்டுநரை கைது செய்தனர். பைக் டாக்சி ஓட்டுநரின் இந்த செயல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.