மாசி மகம் திருவிழா... வரும் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!!

 
Leave

புதுச்சேரியில் மாசி மக பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கு வரும் 7-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி. ​மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இந்த ஆண்டு மாசி மகம் விழா 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமகம் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Masi Maham

இந்த விழாவில் ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனையொட்டி மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கோவில் சுவாமிகள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பதும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பு தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாசி மக தீர்த்த வாரியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளனர்.

holiday

இதனிடையே, புதுச்சேரி கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 7-ம் தேதி மாசி மக திருவிழாவையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

From around the web