கணவருக்கு ஆண்மை பரிசோதனை... ஆத்திரத்தில் மாமியார், மனைவியை கொன்ற புதுமாப்பிள்ளை!! ஆந்திராவில் பகீர் சம்பவம்!

 
Andhra

ஆந்திராவில் ஆண்மை பரிசோதனைக்கு தெரியாமல் அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை, மனைவியையும், மாமியாரையும் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மா சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி (50). இவர்களுக்கு சரவணன் என்ற மகன் உள்ளார். பி.டெக் படித்து முடித்துள்ள இவர், ஐதராபாத்தில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வராலு - ரமாதேவி (45). இவர்களுக்கு 20 வயதில் ருக்மணி என்ற மகள் உள்ளார். 

ருக்மணிக்கும் சரவணனுக்கு கடந்த 1-ம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த கையேடு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சரவணன், ருக்மணியிடம் எதுவும் பேசாமல் தூங்கியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற சில நாட்கள் நடந்துள்ளது. இவர்கள் உறவு குறித்து ருக்மணியிடம் அவரது தாய் ரமா தேவி கேட்கவே, அவரும் சரவணன் தன்னிடம் நெருங்கவில்லை என்ற உண்மையை கூறியிருக்கிறார். இதனால் மாப்பிள்ளை மீது பெண்ணின் குடும்பத்தாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. 

murder

எனவே அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளனர். இந்த விவகாரம் மறுநாள் புதுமாப்பிள்ளை சரவணனுக்கு தெரியவரவே அதிரமடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கிசுகிசு என பேசி வந்துள்ளனர். இதனால் மேலும் கோபம் கொண்ட சரவணன், அருகிலிருந்த கத்தியை கொண்டு தனது மனைவி ருக்மணியையும், மாமியார் ரமாதேவியையும் குத்தியுள்ளார். 

அதோடு தனது மாமனாரையும் குத்தியுள்ளார். இருப்பினும் மாமனார் அங்கிருந்து தப்பி ஓடினார். சரவணனின் இந்த கொடூர தாக்குதலில் மனைவி மற்றும் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். இந்த கொலைக்கு சரவணனின் தந்தை பிரசாத்தும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சம்பவம குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Police-arrest

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றம் புரிந்த தந்தை பிரசாத் மற்றும் புது மாப்பிள்ளை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். திருமணம் முடிந்த இரண்டே வாரங்களில் ஆண்மை சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை திட்டமிட்டு மனைவி, மாமியாரை தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

From around the web