கேரளாவில் பிரியாணி பார்சல் வாங்கியவருக்கு அதிர்ச்சி.. கோழியின் முழு தலை கிடந்ததால் பரபரப்பு!

 
Kerala

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில், சுத்தம் செய்யப்படாத கோழியின் தலை இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர், அண்மையில் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கி உள்ளார். அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்து பார்த்துள்ளார்.

Briyani

அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அமலாக்க உதவி ஆணையர் சுஜித் பெரேரே, உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.ஐ.ஷம்சியா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு தற்காலிகமாக சீல் வைத்து மூடினார்கள். ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kerala

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பார்சல் வாங்கிய பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்ததால் உணவு பாதுகாப்பு துறையை அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

From around the web