ஒரே நேரத்தில் பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக பரவி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதியும் நடைபெற்றது.
இந்த நிலையில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 20) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளருக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தலின் போது ஃபரூக்காபாத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
अगर चुनाव आयोग को लगे कि ये गलत हुआ है तो वो कुछ कार्रवाई ज़रूर करे, नहीं तो…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 19, 2024
भाजपा की बूथ कमेटी, दरअसल लूट कमेटी है। #नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/8gwJ4wHAdw
அந்த வீடியோவில், ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முகேஷ் ராஜ்புத் என்பவருக்கு அந்த இளைஞர் 8 முறை வாக்களிக்கிறார். தான் 8 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதை அந்த இளைஞரே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் தேர்தல் ஆணையத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.