கருக்கலைப்பில் உயிரிழந்த காதலி உடலை ஆற்றில் வீசிய காதலன்.. குழந்தைகளையும் தள்ளிவிட்ட கொடூரம்!

 
Maharashtra

கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்த கர்பிணி பெண்ணின் உடலை ஆற்றில் வீசி, அவரின் 2 குழந்தைகளையும் அதே ஆற்றில் காதலன் தள்ளிவிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் கணவனைப்  பிரிந்து காதலுடன் வாழும்  25 வயது பெண் கர்பமடைந்த நிலையில்  கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார். கருக்கலைப்பின்போது துரதிஷ்டவசமாக அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

abortion

இதனைத்தொடர்ந்து பெண்ணின் உடல் அவரது காதலனிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரை விட்டு பிரிந்து காதலனுடன் வாழும் அந்த பெண்ணுக்கு  ஏற்கனவே 2 வயதில் ஒரு குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 9-ம் தேதி தனது நண்பனுடன் பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புனே நோக்கி காதலன் வந்துள்ளான்.  

வரும் வழியில் காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி ஆற்றில் பெண்ணின் உடலை வீசியுள்ளான். அழுதுகொண்டிருத்த 2 குழந்தைகளையும் அவர்கள்  ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். தனது பெண்ணை காணவில்லை என்று தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

dead-body

புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை போலீசார்  மீட்ட நிலையில் காணாமல் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web