ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல் ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 
Mumbai

மகாராஷ்டிராவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ் கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்தவர் பிரெண்டன் செர்ராவ் (27). மருத்துவரான இவர்,  ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்தது. செர்ராவ் ஆவலுடன் ஐஸ்கிரீம் பேக்கைத் திறந்து சாப்பிட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  வாயில் ஏதோ படுவதை உணர்ந்தார்.

ice cream

அவர் கூர்ந்து கவனிக்கும் போது ஐஸ்கிரீமில் மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவர் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஐஸ்கிரீம் நிறுவனமான யும்மோ ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும், ஐஸ்கிரீமுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித விரலை பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web