மேடையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலி.. ராம்லீலா நிகழ்ச்சின்போது சோகம்!

 
Delhi

டெல்லியில் மேடையில் நடித்துக் கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சியில் சுஷில் கவுசிக் (45) என்பவர் ராமர் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மேடையில் நடித்துக்கொண்டிக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த அவர் நெஞ்சில் கை வைத்தபடியே மேடையில் மயங்கி விழுந்தார். 

Dead Body

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த சுஷில் கவுசிக் சொத்து இடைத்தரகராக பணிபுரிந்து வந்தார் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜனவரியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், ராம்லீலா நிகழ்ச்சியின்போது அனுமானாக நடித்தவர், ராமரை சித்தரிக்கும் நபரின் காலில் விழுந்து மேடையிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web