பழுதாகி நின்ற பராமரிப்பு ரயில்.. தள்ளிச் சென்ற ரயில்வே ஊழியர்கள்.. வைரல் வீடியோ!

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
 
பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 


உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான ரயில் சென்று கொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.

From around the web