விஷம் குடித்து காதலர்கள் தற்கொலை.. காதலர் தினத்தன்று நடந்த சோகம்!

 
Lovers

உத்தர பிரதேசத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர் தினத்தன்று காதலர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீமா (19) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால், இவர்கள் விவகாரத்தைத் தெரிந்த இருவீட்டாரும் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் மன வருத்தத்தில் இருந்தனர்.

Suicide

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வயலுக்குச் செல்வதாக சுரேந்திர சிங் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். அதே நேரத்தில் சீமாவும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். வயலுக்குச் சென்ற சுரேந்திர சிங் அங்கு விஷம் குடித்தார். அங்கு வந்த தனது காதலி சீமாவிடம் விஷம் குடித்த விஷயத்தைக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சீமாவும் விஷத்தைக் குடித்தார். இதனால் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர். அப்போது வயலுக்கு வந்த தொழிலாளர்கள் சுரேந்திர சிங், சீமா மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மஹோபா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

dead-body

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த காதலர்களின் உடல்களை மீட்டு பரிசோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சர்காரி காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ் பிரசாத் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். காதலர் தினத்தன்று காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web