காதலனால் பிரேக் அப் ஆன காதல்.. நிர்வாண போட்டோவை வெளியிட்டதால் காதலி தற்கொலை!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

 
Kerala

கேரளாவில் காதலியை பழி வாங்குவதற்காக, நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி அருகே உள்ள கொத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர் (26). இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து நெருக்கமாக பல போட்டோக்களையும் எடுத்து கொண்டனர்.

suicide

இந்த நிலையில், அருண் வித்யாதரின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடனான நட்பை ஆதிரா தவிர்த்துள்ளார். இதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அருண் வித்யாதர், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் இதுகுறித்து கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கடுத்துருத்தி போலீஸில் புகார் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண் வித்யாதர், அந்த பெண்ணின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அந்த பெண்ணின் சகோதரியின் கணவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு, தான் கைது செய்யப்பட்டால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

Police

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கடுத்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகள் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என்று அதில் கூறியுள்ளனர். இதையடுத்து அருண் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் கேரள காவல் சட்டம் 119 (பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தலைமறைவான அருண் வித்யாதரைத் தேடி வருகின்றனர்.

From around the web