7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்.. வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு அட்டவணை!

 
Vote

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 16-த் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. 

இந்நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்ததையடுத்து 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

Rajiv Kumar

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 19

2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26

3ம் கட்ட தேர்தல் - மே 7

4ம் கட்ட தேர்தல் - மே 13

5ம் கட்ட தேர்தல் - மே 20

6ம் கட்ட தேர்தல் - மே 25

7ம் கட்ட தேர்தல் - ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்:

தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரா, சண்டிகார், டெல்லி, கோவா, குஜராத், இமாச்சலபிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவுகள், லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட்.

2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர்

3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

சத்தீஷ்கார், அசாம்

4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்

5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

மராட்டியம், ஜம்மு-காஷ்மீர்

7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம்

Election commission

தேர்தல் தேதி விவரம்:

1ம் கட்ட தேர்தல் - 102 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: மார்ச் 18
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
வேட்புமனு பரீசிலனை: மார்ச் 28
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 19

2ம் கட்ட தேர்தல் - 89 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: மார்ச் 28
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 4
வேட்புமனு பரீசிலனை: ஏப்ரல் 6
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: ஏப்ரல் 8
வாக்குப்பதிவு: ஏப்ரல் 26

3ம் கட்ட தேர்தல் - 94 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: ஏப்ரல் 12
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 9
வேட்புமனு பரீசிலனை: ஏப்ரல் 20
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: ஏப்ரல் 22
வாக்குப்பதிவு: மே 7

4ம் கட்ட தேர்தல் - 96 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: ஏப்ரல் 18
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 25
வேட்புமனு பரீசிலனை: ஏப்ரல் 26
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: ஏப்ரல் 29
வாக்குப்பதிவு: மே 13

Tamil-Nadu-Urban-Local-Election-61-percentage-Votes-Registration

5ம் கட்ட தேர்தல் - 49 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: ஏப்ரல் 26
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: மே 3
வேட்புமனு பரீசிலனை: மே 4
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: மே 6
வாக்குப்பதிவு: மே 20

6ம் கட்ட தேர்தல் - 57 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: ஏப்ரல் 29
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: மே 6
வேட்புமனு பரீசிலனை: மே 7
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: மே 9
வாக்குப்பதிவு: மே 25

7ம் கட்ட தேர்தல் - 57 தொகுதிகள்

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: மே 7
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: மே 14
வேட்புமனு பரீசிலனை: மே 15
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: மே 17
வாக்குப்பதிவு: ஜூன் 1

7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

From around the web