ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் உயிருள்ள நத்தை.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்.. வைரல் வீடியோ!

 
Snail

கர்நாடகாவில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு உணவில் உயிருடன் நத்தை இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீப காலமாகவே மக்கள் ஆர்டர் செய்யும் உணவில் பள்ளி,கரப்பான் பூச்சி என ஜீவராசிகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ஆர்டர் செய்த உணவில் நத்தை கிடந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் தவல் சிங். இவர், பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் ஸ்விக்கி மூலம்  சாலட் ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, அவருக்கு சாலட் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்த பார்த்த போது அந்த சாலட்டில் நத்தை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Swiggy

இதையடுத்து அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். Leon Grill மீண்டும் ஒருபோதும் ஆர்டர் செய்ய வேண்டாம். மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்விக்கியை வலியுறுத்தியும், பெங்களூரு மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஸ்விக்கி, எக்ஸ் பக்கத்தில் தவால் சிங்கின் இடுகைக்கு பதிலளித்தார், இந்த சம்பவத்தை கொடூரமானது என்று விவரித்தார். ஸ்விக்கி, ஆரம்பத்தில் பகுதியளவு பணத்தைத் திரும்பப்பெறும். ஆனால் பின்னர் முழு ஆர்டருக்கான முழு பணத்தைத் திருப்பித் தருவதன் மூலம் அதை சரிசெய்தார், சிங் தெளிவுபடுத்தினார்.


மேலும் இது போன்ற நிகழ்வு அந்த உணவகத்தில் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் தங்களது கருத்துகளை அவ்வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web