திருமண மண்டபத்திற்குள் புகுந்த சிறுத்தை.. புத்திசாலியாக செயல்பட்ட சிறுவன்.. வைரல் வீடியோ!

 
Leopard

மகாராஷ்டிராவில் திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவன் நகரில் திருமண மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் காவலாளியாக பணியாற்றி வருபவரின் 12 வயது மகன் மொகித் ஆஹிரே, அறையில் அமர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்தபோது, அதிர்ச்சி தரும் அந்த சம்பவம் நடந்தது.

Leopard

அவனுடைய அறையில் சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்துள்ளது. இதனை கண்டதும் மிரண்டு விடாமல், அது உள்ளே சற்று தொலைவில் சென்றதும் செல்போனை கீழே வைத்து விட்டு, உடனடியாக எழுந்து வெளியே சென்று அறை கதவை சாத்தி விட்டான்.

அதன்பின்னர், தந்தையிடம் தகவல் தெரிவித்து உள்ளான். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளிவந்து உள்ளது.  சம்பவம் குறித்து சிறுவன் ஆஹிரே கூறும்போது, அது மிக நெருக்கத்தில் இருந்தது. எனக்கும், சிறுத்தைக்கும் இடையே மிக குறைந்த அளவே இடைவெளி இருந்தது. எனக்கு முன்னால் நடந்து சென்ற அது, அலுவலக அறையின் உட்புற பகுதிக்கு சென்றது. நான் பயந்து போய் விட்டேன்.


ஆனால், அமைதியாக எழுந்து, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன். கதவை சாத்தி விட்டேன் என கூறினான். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன துறை அதிகாரிகள், 5 வயதுடைய அந்த ஆண் சிறுத்தையை மயக்கமடைய செய்து, பின்னர் மீட்டு சிறையில் அடைத்தனர்.

From around the web